indupoems

+ 1 - அன்னை...........

In Uncategorized on December 12, 2011 at 19:25

எத்தனை பளு தூக்கிகள் வந்தாலும்
இணையாகாதது அன்னையின் பேறு காலம்
எத்தனை கயிறுகள் வந்தாலும்
இணையாகாதது அன்னையின் தொப்புள் கொடி
எத்தனை குளிர் கடத்தா ஆடைகள் வந்தாலும்
ஈடாகாதது அன்னையின் அணைப்பில் வரும் சூடு
எத்தனை சுனாமி வந்தாலும்
மாறாதது அன்னையின் அன்பு
எத்தனை சூரியன் வந்தாலும்
கரையாதது அன்னையின் பாசம்
எத்தனை மொழிகள்  கற்றாலும்
முதல்  வார்த்தையாவது  அம்மா
எத்தனை சொந்தங்கள் வந்தாலும்
நாம் தேடும் முதல் சொந்தம் அம்மா
எத்தனை பெரிய நாற்காலியில் அமர்ந்தாலும்
இணையாகாதது அன்னையின் மடி
எத்தனை வாசனை திரவியம் பூசினாலும்
மாறாதது அன்னையின் பால் வாசனை     
எத்தனை படுக்கையில் படுத்தாலும்
மீண்டும் கிடைக்காதது அன்னையின் சேலையில் கட்டிய தொட்டில்
மீண்டும் கிடைக்காத வரம் அன்னை
வரத்தை சாபமாக்காதீர்கள்

                                    இந்துமதி










Tags : அன்னை

+ 1 - மாற்றமும்... வடிவமும்....

In Tamil poems on November 11, 2011 at 19:13

 

நீ என் அருகில் இல்லை என்று எண்ணாதே.....

நான் உன்னை நினைக்கையில்

எனக்குள் ஏற்படும் மாற்றங்கள் அனைத்துமே நீதான்....

என் பார்வையின் அபிநயமும் நீதான்...
என் பாதையின் வழித்தடமும் நீதான்...
என் வார்த்தைகளின் பொருளும் நீதான்...
என் பெண்மையின் அழகும் நீதான்...
என் சிரிப்பில் இதழின் வளைவும் நீதான்...
என் தனிமையும் நீதான்...
என் தனிமையின் காரணமும் நீதான்....
என் இதயமும் நீதான்...
என் இதய துடிப்பும் நீதான்...
சொல்ல போனால்...
என் உலகமே நீதான்...
ஆனால்...
என்றும் உன் துணைக்கோள் நான் தான்.

 


                                                         என்றும் அன்புடன் 
                                                                       இந்து
 

 


Tags : மாற்றமும் - வடிவமும்

+ 2 - ரசித்த அழுகை....

In Tamil poems on September 9, 2011 at 17:48

உனக்கு பிடிக்கும் என்று 

அனைத்தையும் பழக கற்றுக்கொண்டேன்......

அழுகவும் கூட.....

அழுத பின் ரசிக்கவும் செய்தேன்.....

என் கண்ணீருக்கு அடியில் உன் விரல் இருப்பதால் !!!!!!!!


அன்புடன் 

   இந்து


Tags : ரசித்த - அழுகை

+ 0 - வாழ்க்கை.....

In Tamil poems on September 9, 2011 at 17:42

இவ்வுலகில்....

வாழ்வது ஒருமுறை அதை 

அர்த்தமுள்ளதாக வாழ்ந்துவிடு....

போனால் வருவதற்கு இது 

மழை மேகமும் அல்ல...

வேறு பொருளாய் திரும்பி வருவதற்க்கு இது

போகியில் புகையும் பொருளும் அல்ல...

இது 

கடவுளே கடனாய் தந்த வரம்.

வரத்தை சபமாக்கதீர்கள்........... 

 

                                            அன்புடன் 

                                               இந்து 


Tags : வாழ்க்கை

+ 1 - சோளக்காட்டு பொம்மை.....

In Tamil poems on September 9, 2011 at 17:21

வானம் பார்த்த பூமியை வாடாமல் பார்த்து கொண்டால் ....

வான் புகழ் பெறலாம் வாழ்நாள் முழுவதும்.....

ஓயாமல் உழைக்கும் சோளக்காட்டு பொம்மையும்....

சோர்ந்து போகும் ஒரு நாள்....

சோடியம் ஆக்சைடும் சொல்லாமல் 

தன் எல்லைக்குள் புகுந்தால்.

சொர்க்க பூமியாய் இருக்கும் நம் விளை நிலத்தை 

வீணடிக்காமல் காத்தால் 

சோலாரிலும் சோறு செய்யலாம் வருங்காலத்தில்........

 

 அன்புடன் 

     இந்து 


Tags : சோளக்காட்டு - பொம்மை

+ 1 - நேசி(க்க)த்த நொடிகள்....

In Tamil poems on February 2, 2011 at 12:46

உன்னை நேசிக்க ஆரம்பித்த நொடி

எனக்கு தெரியாது......

ஆனால்....

இனி வாழப்போகும் நொடிகள் எல்லாம்

உன்னை நேசிக்க மட்டும் தான் என்பது தெரியும்.

 

                                            அன்புடன்

                                               இந்து


Tags : நேசி

+ 2 - பாரதி கண்ட பெண்.....

In Tamil poems on February 2, 2011 at 12:21

பாரதி கண்ட புதுமை பெண் நானல்ல....
புரட்சிப்பெண்.
பன்னிரு கைகள் கொண்ட பராசக்தி
பகைவரை வென்றது போல.....
என்னிரு கைகள் கொண்டு எவரையும்
எதிர்கொள்வேன் எதிகாலத்தில்.....
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு மட்டும்
பெண்ணின் உடைமையல்ல.....
வீரமும், விவேகமும் தான்.
வீர பேச்சுகளால் விவேகமாக வையகத்தை
ஆள பிறந்த பெண்களில் ஒருத்தி நான்.
அறியாமையால் அழிக்கப்ப்டும் பெண்ணினத்தை
அறியனை ஏற்ற வந்தவள் நான்.

                                             என்றும் அன்புடன்
                                                     இந்து


Tags : பாரதி

+ 0 - நீ வருவாய் என.....

In Tamil poems on February 2, 2011 at 20:17

காற்றோடு கலந்து விட்ட

உன் சுவாசத்தையும்.....

உன் நிழலோடு கலந்து விட்ட....

என் நினைவையும்......

தேடினேன் தேய்பிறையானேன்....

அரை நிமிடமும் ஆயுட்க்காலம் ஆனது...

உன் நினைவால்......

ஆதவனும் அச்சப்பட்டான்...

என் கண்ணீரால் கார்காலம் வந்து விடுமோ என்று.

என் இதய குழியும் புதை குழியானது

உன் ஏக்கங்களின் ஆர்பரிப்பால்...

என் நண்பர்களும் நாசுக்காக நகர்ந்தனர்

அவர்கள் இதயத்தையும் உனக்கு கொடுப்பதற்க்காக.....

நூறு கிராம் இதயமும் நோய்படாமல்

நூறு டன் உன் நினைவை சுமந்தது....

நீ வருவாய் என......

                                          அன்புடன்

                                             இந்து


Tags : வருவாய்

+ 1 - இதயத்தின் ஓவியம்....

In Tamil poems on February 2, 2011 at 20:08

பார்த்த பல முகங்கள்

பாதை மாறி போனாலும் - பாசமுள்ள

உன் முகம் மட்டும் என் இதயத்தினுள்

ஓர் ஓவியமாய்  இருக்கும் என்றும்....


                                         அன்புடன்

                                            இந்து


Tags : இதயத்தின்

+ 0 - என் கண்கள்....

In Tamil poems on February 2, 2011 at 20:00

காட்சி பொருட்களை மட்டுமே

காண துடிக்கும் என் கண்களுக்குள்.....

காட்சி பொருளாய் நின்ற கள்வனே....

காலங்கள் ப கடந்தாலும்....

கவிதைகள் பல படைக்கும் என் கண்கள்....

சில நேரங்களில் மொளன ராகமும் இசைக்கும்....

உனக்காக......


                           அன்புடன்

                              இந்து


Tags : என் - கண்கள்

Blog Labels

Platted Hairstyles For Men
The basic purpose of any hairstyle should be to add liveliness and create an effect.
www.lastsee.com